சினிமா செய்திகள்

கொலை மிரட்டல் விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் - துப்பாக்கி உரிமம் கேட்க முடிவு + "||" + Murder threat case: Actress Srireddy complained to Human Rights Commission - to seek gun license

கொலை மிரட்டல் விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் - துப்பாக்கி உரிமம் கேட்க முடிவு

கொலை மிரட்டல் விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் - துப்பாக்கி உரிமம் கேட்க முடிவு
கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.

அதிரடி புகார்கள் கூறி திரையுலகையே அதிர செய்தவர், நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது ‘ரெட்டி டைரி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா பைனான்சியர் சுப்பிரமணி உள்பட 2 பேர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். சில மணி நேரங்களிலேயே அந்த புகாரை அவர் திரும்ப பெற்றார்.


இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தயாரிப்பாளர் ரவிதேவனுடன் வந்த ஸ்ரீரெட்டி புகார் மனுவை அளித்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எனக்கு நடந்த மனித உரிமை மீறல்களை புகாராக அளித்துள்ளேன். ரெட்டி டைரி படப்பிடிப்புக்காக சென்னை வந்தேன். சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக ரெட்டி டைரி படப்பிடிப்பு நடைபெறவில்லை. பட தயாரிப்பாளர் ரவிதேவனுக்கும், படக்குழுவினருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும், உயிருக்கு ஆபத்து உள்ளதால் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீர் பாட்டிலில் காந்தி படம் விவகாரம்: இஸ்ரேல் கம்பெனி மன்னிப்பு கோரியது - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
பீர் பாட்டிலில் காந்தி படம் விவகாரத்தில், இஸ்ரேல் கம்பெனி மன்னிப்பு கோரியதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
2. போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - இந்து முன்னணி பிரமுகர் கைது
போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது:-
3. மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் - கர்நாடக மந்திரி குற்றச்சாட்டு
மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்வதாக கர்நாடக மந்திரி குற்றம் சாட்டினார்.
4. 9 மந்திரிகள் ராஜினாமா செய்த விவகாரத்தில் புதிய திருப்பம்: இலங்கையில் 2 முஸ்லிம் மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்
இலங்கையில் 9 முஸ்லிம் மந்திரிகள் பதவி விலகிய விவகாரத்தில் புதிய திருப்பமாக, 2 மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்.
5. ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்: தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்கு
ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.