சினிமா செய்திகள்

நடிகையிடம் ரூ.50 ஆயிரம் பேரம் பேசிய நடிகர் + "||" + Actress Rs 50 thousand Actor bargaining

நடிகையிடம் ரூ.50 ஆயிரம் பேரம் பேசிய நடிகர்

நடிகையிடம் ரூ.50 ஆயிரம் பேரம் பேசிய நடிகர்
நடிகையிடம் ரூ.50 ஆயிரம் பேரம் பேசிய நடிகர்குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே புகார் கூறியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த பட்டியலில் சிக்கினர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்னொரு தெலுங்கு நடிகையான கல்யாணியும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். இதுகுறித்து கல்யாணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“படுக்கைக்கு அழைப்பது என்பது சினிமா துறையில் புதிய விஷயம் இல்லை. இந்த தொல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. ஐ.டி. கம்பெனியிலும் செக்ஸ் தொல்லைகள் உள்ளன. அங்கு முத்தம் கொடுப்பது, கட்டி பிடிப்பதையெல்லாம் பெரிய பிரச்சினையாக பார்ப்பது இல்லை. சினிமாவில் நானும் பாலியல் தொல்லையை அனுபவித்தேன்.

படத்தில் ஒப்பந்தம் செய்தபோது ஒரு நடிகர் என்னை அணுகி அவரது ஆசைக்கு இணங்கும்படி கூறினார். இதற்காக மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இதனால் நான் குடியிருந்த வீட்டில் இருந்தே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இன்னொரு வாடகை வீட்டுக்கு சென்றேன்.

மனதளவில் தைரியமாக இருந்தால் எந்த பயமும் இல்லை. யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு நடிகை கல்யாணி கூறினார்.