சினிமா செய்திகள்

சென்னையில் விழா: 25 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலா + "||" + Function in Chennai: P. Susheela who sang 25 thousand songs

சென்னையில் விழா: 25 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலா

சென்னையில் விழா: 25 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலா
25 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.


மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84.

சுசீலாவின் சாதனைகளை பாராட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வருகிற மே 19-ந் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் நடிகர்-நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்-பாடகிகள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்ப்பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு துணைவேந்தர் தகவல்
தமிழ்ப்பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
2. கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் முளைப்பாரி எடுப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் புகழ்பெற்ற காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
3. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
4. சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து
சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident
5. சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது