சினிமா செய்திகள்

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் 10 படங்கள் ரிலீஸ் + "||" + In the midst of the election surprise Next month is the release of 10 films

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் 10 படங்கள் ரிலீஸ்

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் 10 படங்கள் ரிலீஸ்
தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், அடுத்த மாதம் 10 படங்கள் ரிலீசாக உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையிலும் அடுத்த மாதம் 10 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. ஏப்ரல் 4-ந் தேதி மட்டும் உறியடி, நட்பே துணை, குப்பத்து ராஜா, ஒரு கதை சொல்லட்டுமா ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன. குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

‘நட்பே துணை’ படத்தில் இசையமைப்பாளர் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. ஏப்ரல் 12-ந் தேதி கீ, தேவராட்டம், வாட்ச்மேன் ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன. கீ படத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகி உள்ளது. தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் ஜோடியாக வருகின்றனர். முத்தையா இயக்கி உள்ளார். அதிரடி படமாக உருவாகி உள்ளது. ‘வாட்ச்மேன்’ படம் ஜீ.வி.பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் திகில் படமாக தயாராகி உள்ளது. விஜய் இயக்கி உள்ளார். ஏப்ரல் 19-ந் தேதி காஞ்சனா-3, அலாவுதீன் அற்புத கேமரா, வெள்ளைப்பூக்கள் ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி உள்ள காஞ்சனா-3 படத்தின் முந்தைய 2 பாகங்களும் வசூல் குவித்ததால் இந்த படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. திகிலான பேய் படமாக உருவாகி உள்ளது. வெள்ளைப்பூக்கள் படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.