சினிமா செய்திகள்

ஆதியின் பார்ட்னர்'அறிவியல் கலந்த நகைச்சுவை படம் + "||" + Partner science Comedy movie

ஆதியின் பார்ட்னர்'அறிவியல் கலந்த நகைச்சுவை படம்

ஆதியின் பார்ட்னர்'அறிவியல் கலந்த நகைச்சுவை படம்
ஆதியும், ஹன்சிகாவும் முதன்முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு, `பார்ட்னர்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
`பார்ட்னர்'  படத்தில் `டோரா' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் சற்குணத்திடம் உதவி டைரக்டராக இருந்தவர். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

``இது, ஒரு நகைச்சுவை படம். அறிவியல் கலந்த ஒரு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படமாக இருக்கும். அது, ரசிகர்களை வெகுவாக கவரும். அதற்கேற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். ஆதிக்கும் முக்கியமான படமாக இருக்கும். அவருக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். எஸ்.பி.கோலி தயாரிக்கிறார். படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் பேசப்படும்.

பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், வி.டி.வி.கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. தடகள விளையாட்டு வீரராக ஆதி
கனவுகளை நிறைவேற்ற போராடும் தடகள விளையாட்டு வீரராக ஆதி! படத்தின் முன்னோட்டம்.
2. மீண்டும் திகில் படத்தில், ஹன்சிகா
மீண்டும் ஒரு திகில் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார்.