சினிமா செய்திகள்

சி.வி.குமார் தயாரிப்பு-டைரக்‌ஷனில்`கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ + "||" + Gangs of Madras

சி.வி.குமார் தயாரிப்பு-டைரக்‌ஷனில்`கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’

சி.வி.குமார் தயாரிப்பு-டைரக்‌ஷனில்`கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’
சி.வி.குமார் தயாரிப்பு-டைரக்‌ஷனில், ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற புதிய படம் உருவாகி இருக்கிறது.
‘பீட்சா,’ சூது கவ்வும்,’ ‘இறுதி சுற்று’ உள்பட பல படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தை முதன்முதலாக டைரக்டு செய்தார். அதையடுத்து அவருடைய தயாரிப்பு-டைரக்‌ஷனில், ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற புதிய படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

‘‘இது, போதை பொருள் கடத்தல் பற்றிய கதை. அந்த கடத்தல் கும்பலிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக் கொள்கிறது. கடத்தல்காரர்களிடம் இருந்து காதல் ஜோடி எப்படி தப்புகிறது? என்பதே கதை.

காதல் ஜோடியாக அசோக்-பிரியங்கா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, மும்பை ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’