சினிமா செய்திகள்

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில்``சிம்பு, 30 நிமிடங்கள் வருவார்!'' + "||" + Simbu on Hansika's new movie

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில்``சிம்பு, 30 நிமிடங்கள் வருவார்!''

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில்``சிம்பு, 30 நிமிடங்கள் வருவார்!''
ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார்.
சிம்புவும், ஹன்சிகாவும் `வாலு' படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. இருவரும் காதலர்களாக வாழ்ந்தனர். இவர்களின் காதல் அடுத்த கட்டத்தை நோக்கி போவதற்குள், இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

``நாங்கள் இருவரும் பிரிந்து விட்டாலும், நண்பர்களாக இருப்போம்'' என்று இரண்டு பேரும் கூறினார்கள். அதை நிரூபிப்பது போல், சில வருட இடைவெளிக்குப்பின், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அந்த படத்தின் பெயர், `மஹா.' இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் இது. கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கனமான பாத்திரம் ஒன்று உள்ளது. அதில், சிம்பு நடிக்கிறார்.

முதலில் அவருடைய கதாபாத்திரம் படத்தில் சில நிமிடங்களே வருவதாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், 30 நிமிடங்கள் சிம்பு வருகிற அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வேடத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என்று அவரிடம் ஹன்சிகா போன் மூலம் கேட்டுக் கொண்டார். அதற்கு சிம்புவும் சம்மதித்து நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹன்சிகா புகைக்கும் படம்; டைரக்டர் விளக்கம்
ஹன்சிகா ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜமீல் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
3. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது.
4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு!
‘காற்றின் மொழி’ படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.