‘ராம் கி ஜென்ம பூமி’ படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு


‘ராம் கி ஜென்ம பூமி’ படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 28 March 2019 10:00 PM GMT (Updated: 28 March 2019 5:48 PM GMT)

அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சினையை மையமாக வைத்து ‘ராம் கி ஜென்மபூமி’ என்ற இந்தி படம் தயாராகி உள்ளது.

'ராம் கி ஜென்மபூமி’ படம். இதில் கோவிந்த் நம்தியோ, மனோஜ் ஜோஷி உள்பட பலர் நடித்துள்ளனர். சனோஷ் மிஸ்ரா இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

படத்தை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் வாசிம் ரிஸ்விக்கு கொலை மிரட்டல்களும் வந்தன. படக்குழுவினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ராம் கி ஜென்ம பூமி படத்தை இன்று திரைக்கு கொண்டு வருவதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து படத்துக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் லில்லி தாமஸ் மனுதாக்கல் செய்தார்.

இந்த படம் வெளியானால் ராமஜென்ம பூமி குறித்து நடந்து வரும் மத்தியஸ்தர்கள் குழு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. மத்தியஸ்தர் குழு விசாரணைக்கும், படத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று கூறி விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Next Story