சினிமா செய்திகள்

பேய் வேடத்தில், பிரபுதேவா + "||" + The role of the devil film, Actor Prabhu Deva

பேய் வேடத்தில், பிரபுதேவா

பேய் வேடத்தில், பிரபுதேவா
தமிழில் பேய் படங்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வருடத்துக்கு 30-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கின்றன.
முன்னணி நடிகைகளும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார்.

திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். தற்போது பேய் படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். லாரன்சின் பேய் படமான காஞ்சனாவின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது காஞ்சனா 3-ம் பாகமும் தயாராகி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.


இதுபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து 2016-ல் திரைக்கு வந்த தேவி பேய் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் தமன்னா பேயாக நடித்து இருந்தார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தேவி-2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

இதன் டிரெய்லர் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் பிரபுதேவா பேயாக வரும் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை பயமுறுத்தும் என்கின்றனர்.