சினிமா செய்திகள்

நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி? + "||" + Actress Sri Reddy The movie of life Try to prevent it

நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி?

நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி?
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் வசிக்கிறார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.
ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தை அலாவுதீன் இயக்க சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் அடுத்த மாதம் இறுதியில் அல்லது மே மாதம் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.


படத்தில் உண்மை சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு அளிப்பதாக படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சம்பந்தமான காட்சிகளை அப்படியே படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராகி வருகிறார்கள். படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர். இதனை ஸ்ரீரெட்டியே கூறியுள்ளார். படத்தை தடுத்தால் கோர்ட்டுக்கு செல்ல படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது, “ரெட்டி டைரி தலைப்பை எதிர்த்தனர். தொடர்ந்து படத்துக்கு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார்கள். தடையை மீறி படத்தை திரைக்கு கொண்டு வருவோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரெட்டியும், சர்ச்சைகளும்...!
ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைகளின் தலைவி என்றாகி விட்டார். இவரை சுற்றி சர்ச்சைகளும், பிரச் சினைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.