சினிமா செய்திகள்

‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசு + "||" + Before Chhapaak acid attack survivor has a heartwarming present for Deepika Padukone

‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசு

‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசு
‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதயப்பூர்வமான பரிசை வழங்கியுள்ளார்.

 டெல்லியை சேர்ந்த லஷ்மி என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலிக்க மறுத்த காரணத்துக்காக ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையில், பல இன்னல்களைக் கடந்து லஷ்மி இப்போது வெற்றிகரமான பெண்மணியாக இருக்கிறார். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

இதற்காக 2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி லஷ்மியைப் பெருமைப்படுத்தினார். பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 

ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். ‘சபாக்’ என பெயரிடப்பட்ட திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. ‘சபாக்’ திரைப்படத்தை, ‘ராசி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி ‘சபாக்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மணிஷா மரோடியா பிரஜாபதி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். 

தன்னுடைய கையால் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மனீஷாவின் அற்புதமான கலைப்படைப்பை தீபிகா ஏற்பார் என டுவிட் செய்யும் ரசிகர்கள், அவருடைய திறமையை பாராட்டியும் வருகிறார்கள்.