சினிமா செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார் + "||" + Popular cinema director Mahendran expires

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். 

தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.

 தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.. அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது
ராமநாதபுரத்தில் முன் விரோதம் காரணமாக வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
2. பிரதமர் மோடி - சீன அதிபர் 11-ந் தேதி வருகை சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
11-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மறுநாள் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னையிலும், மாமல்லபுரத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
3. பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்
பிரதமர் வருகையை ஒட்டி சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. ‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’: மு.க ஸ்டாலின் பேட்டி
‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
5. துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் - முதலமைச்சர் பழனிசாமி
துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...