சினிமா செய்திகள்

முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடினார், மனிஷாயாதவ் + "||" + Before the statue of Muniswaran, Samy pulled up, Manishayadav

முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடினார், மனிஷாயாதவ்

முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடினார், மனிஷாயாதவ்
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, டி.சிவராம்குமார் தயாரிக்கும் ‘சண்டி முனி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

‘சண்டி முனி’ படத்தில் கதாநாயகியாக மனிஷாயாதவ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். மில்கா செல்வகுமார் கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

இந்த படத்துக்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் அரங்கும், 30 அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலையும் அமைக்கப்பட்டது. அந்த சிலை முன்பு கதாநாயகி மனிஷாயாதவ் சாமி ஆடிய காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது.

படத்தை பற்றி டைரக்டர் மில்கா செல்வ குமார் சொல்கிறார்:-

“நட்ராஜ்-மனிஷாயாதவ் இருவரும் காதலர்கள். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், நட்ராஜுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து அவர் விடுபடவும், திருமணம் நடைபெறவும் வேண்டி குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. மனிஷா யாதவுக்கு அருள் வந்து சாமியாடுகிறார். அந்த காட்சிதான் இது.

படத்தின் 90 சதவீத காட்சி படமாக்கப்பட்டு விட்டது. பழனி, கொடைக்கானல், நெய்க் காரன்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”