அமெரிக்கா சென்று “ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறேன்”
‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், நிவேதா பெத்துராஜ்.
நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். அவர் நடித்த ‘பொன்மாணிக்கவேல்,’ ‘ஜகஜால கில்லாடி,’ ‘பார்ட்டி’ உள்பட பல படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போவதாக அவர் கூறுகிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
“தமிழ் படங்களில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து அமெரிக்கா சென்று ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா போய் விடுவேன்.
இந்த விஷயத்தில், எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காகவே ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன்.”
Related Tags :
Next Story