‘அவெஞ்சர்’ படத்துக்காக உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான் பாடல் வெளியானது


‘அவெஞ்சர்’ படத்துக்காக உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்  பாடல்  வெளியானது
x
தினத்தந்தி 3 April 2019 4:45 AM IST (Updated: 2 April 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

‘அவெஞ்சர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி நடித்துள்ள பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

மார்வெல் என்ற தயாரிப்பு நிறுவனம் காமிக்ஸ் கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை வைத்து தொடர்ந்து 22 சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உருவாக்கி உள்ளது. அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படம் வருகிற 26–ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் இந்த படத்துக்காக மார்வெல் ஆன்ந்தம் பாடலை உருவாக்கி தரும்படி மார்வெல் இந்தியா நிறுவனம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்தது. 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி நடித்துள்ள இந்த மார்வெல் ஆன்ந்தம் இந்தி பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 45 வினாடிகள் உள்ள இந்த பாடல் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாடலை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த பாடலின் தமிழ், தெலுங்கு பதிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story