“நடிகைகள் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள்” கீர்த்தி சுரேஷ் வருத்தம்


“நடிகைகள் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள்”  கீர்த்தி சுரேஷ் வருத்தம்
x
தினத்தந்தி 3 April 2019 10:30 PM GMT (Updated: 3 April 2019 5:18 PM GMT)

நடிகைகள் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் கதை தேர்வில் கவனமாக இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த அரபிக்கடலன்டே சிம்மம் படம் திரைக்கு வர தயாராகி உள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர்-நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள்.

ஆனால் நான் ஆசைகள் எதையும் விட்டு கொடுக்கவில்லை. முன்பு மாதிரியே ஷாப்பிங் போகிறேன். நடிகை என்பது எப்போதுமே எனக்கு பாரமாக இல்லை. நல்லது கெட்டது எல்லா இடத்திலும் இருக்கிறது. ஒன்று வேண்டுமென்றால் இன்னொன்றை விட்டு கொடுக்க வேண்டும். பக்க விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

அதை முதலிலேயே தெரிந்துதான் சினிமா துறைக்கு வந்தேன். நடிகர்-நடிகைகள் பலர் வெளியே போகமுடியாது. மக்கள் மொய்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள். எனக்கு அதில் வருத்தம் இல்லை. அதிலும் ஒரு கிக் இருக்கிறது. அதை நான் ரொம்ப ரசிக்கிறேன். அதை கஷ்டமாக இல்லாமல் இஷ்டமாக அனுபவிக்கிறேன்.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Next Story