நடிகையை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கிய போனிகபூர்
போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது நடிகையின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டி சர்ச்சையில் சிக்கினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா மற்றும் நடிகர்கள் பலர் மும்பையில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மகள் வயது பெண்ணை இப்படி செய்யலாமா என்று போனிகபூரை விளாசினார்கள். பின்னால் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலா முகம் மாறிவிட்டது. இப்படி கேவலமாக போனிகபூர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று சிலர் பதிவிட்டனர்.
திரையுலகில் மூத்தவரான போனிகபூர் இப்படி நடந்து கொள்ளலாமா, சினிமா துறையில் இதெல்லாம் சகஜம்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊர்வசி ரவ்தெலா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ‘‘சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
போனிகபூர் தட்டியபோது அசவுகரியமாக உணர்ந்த ஊர்வசி பட வாய்ப்புகளுக்காக இப்போது அவருக்கு ஆதரவாக பேசுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
Related Tags :
Next Story