பிரஷாந்த் நடிக்கும் ‘சேலஞ்ஜ்’
‘மிஸ் இந்தியா’ ஜோடியாக பிரஷாந்த் நடிக்கும் ‘சேலஞ்ஜ்’
ஜானி படத்தை அடுத்து நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் பட நிறுவனம் ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, ‘சேலஞ்ஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுகிரீத்திவாஸ் நடிக்கிறார். இவர், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் என்பது கூடுதல் தகவல்.
‘சேலஞ்ஜ்’ படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஸ் உத்தமன், உமாபத்மநாபன் ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.
பிரஷாந்த் நடித்த ‘சாக்லெட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த படத்தின் கதை-திரைக்கதை-டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ளார். மனோகரன்-ஷங்கர் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்தி பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி, இசையமைக்கிறார். வேல்ராஜிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ஷிவக்குமார், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
பிரஷாந்தின் பிறந்தநாளான நாளை (6-ந் தேதி) படப் பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர இருக்கிறது. பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், ஹாங்காங் ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
‘‘முன்பின் தெரியாத கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே ‘சேலஞ்ஜ்’ படத்தின் கதை’’ என்கிறார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ்.
Related Tags :
Next Story