சினிமா செய்திகள்

ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு 175 ஏக்கர் நிலத்தை வழங்கும் நடிகர் சுமன் + "||" + Soldiers family Provide 175 acres of land Actor Suman

ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு 175 ஏக்கர் நிலத்தை வழங்கும் நடிகர் சுமன்

ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு 175 ஏக்கர் நிலத்தை வழங்கும் நடிகர் சுமன்
கிரீடம், மதராச பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் டைரக்டு செய்துள்ள புதிய படம் வாட்ச்மேன். இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும் சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.
படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் சுமன் பேசியதாவது:-

“நாட்டை காக்கும் காவலர்கள் நமது ராணுவவீரர்கள். அவர்கள் மத்தியில் சாதி மத பாகுபாடுகள் இல்லை. ஒற்றுமையாக எல்லையில் காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்குள் இருப்பவர்கள் மத்தியில்தான் சாதி மத வேறுபாடுகள் இருக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் எனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்து நான் கஷ்டப்பட்டு நடித்த சம்பாத்தியத்தில் வாங்கியது. இந்த 175 ஏக்கர் நிலத்தையும் ராணுவ வீரர்கள் நலனுக்காக அவர்கள் குடும்பத்துக்கு வழங்க இருக்கிறேன். இந்த நிலத்தை கொடுப்பதற்கு எனது மனைவியும் சம்மதம் தெரிவித்து விட்டார்.” இவ்வாறு நடிகர் சுமன் பேசினார்.


நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவும் நடிகர் சுமன் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அவரைப்போல் நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...