சினிமா செய்திகள்

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி மகளாக நிவேதா தாமஸ்? + "||" + Murugadoss is directing the film Rajini daughter Nivedha Thomas

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி மகளாக நிவேதா தாமஸ்?

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி மகளாக நிவேதா தாமஸ்?
‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்கி 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடக்க உள்ளது. ரஜினிகாந்தின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

இதில் ரஜினி மகளாக நடிக்க நிவேதா தாமஸை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படத்தில் ரஜினிக்கு இவ்வளவு பெரிய மகள் இருப்பதால் வயதான தோற்றத்திலும் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.


ஜோடியாக வரும் நயன்தாராவுக்கும் வயதான தோற்றம் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்திலும் தெலுங்கில் மகேஷ்பாவுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் போலீஸ் அதிகாரி தோற்றம் சமூக வலைத்தளங்களில் கசிந்து விட்டது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக ரஜினி தோற்றத்தை படக்குழுவினர் இன்னும் சில தினங்களில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.