ஜாக்கிசானின் ‘ரஷ் ஹவர்’ படம் 4-ம் பாகம்


ஜாக்கிசானின் ‘ரஷ் ஹவர்’ படம் 4-ம் பாகம்
x
தினத்தந்தி 9 April 2019 4:00 AM IST (Updated: 8 April 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஆசியாவின் சூப்பர் ஸ்டாரான ஜாக்கி சான் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

 ஜாக்கி சான் தனது 8-வது வயதில் லிட்டில் பார்ச்சூன்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 17-வது வயதில் புரூஸ்லியின் பிஸ்ட் ஆப் பியூரி மற்றும் எண்டர் தி டிராகன் ஆகிய படங்களில் சண்டைக்கலைஞராக பணியாற்றினார்.

அதன்பிறகு நடிகரானார். த பிக் ப்ராவ்ல் என்ற படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராகவும் உயர்ந்தார். போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆப் டிராகன், ரஷ் ஹவர் உள்பட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரையுலகில் ஆற்றிய சாதனைக்காக அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜாக்கி சானின் ‘ரஷ் ஹவர்’ படத்தின் 4-ம் பாகம் தயாராக இருப்பதாக நடிகர் கிறிஸ் டக்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் 1998-லும் இரண்டாம் பாகம் 2001-ம் ஆண்டிலும் மூன்றாம் பாகம் 2007-லும் வெளிவந்தன. மூன்று பாகம் படங்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. மூன்றாம் பாகம் வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் 4-ம் பாகம் எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story