மீண்டும் அமலா நடிக்கிறார்
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா.
மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
அதன்பிறகு ஐதராபாத்தில் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட்டார். அமலா தற்போது ஹை பிரீஸ்ட் என்ற தெலுங்கு படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தொடர்ந்து தெலுங்கு படங்களில் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடுகிறார். அமலாவின் மகன் அகிலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story