‘நிக்கிரகன்’ தடம் மாறும் கல்லூரி மாணவர்களின் கதை


‘நிக்கிரகன்’ தடம் மாறும் கல்லூரி மாணவர்களின் கதை
x
தினத்தந்தி 9 April 2019 1:18 PM IST (Updated: 9 April 2019 1:18 PM IST)
t-max-icont-min-icon

தடம் மாறும் 2 கல்லூரி மாணவர்கள் பற்றிய கதைதான் ‘நிக்கிரகன்’.

தடம் மாறும் 2 கல்லூரி மாணவர்கள் பகுதி நேர வேலையாக ரேடியோ ஜாக்கியாக ஒரு எப்.எம். சேனலில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான-கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்கிறார்கள். பின்னர் அதையே முழு நேர வேலையாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

வேடிக்கையாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை அவர்களே அறியாத வண்ணம் ஒரு ஆபத்தில் சிக்குகிறது. அந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி தப்புகிறார்கள்? என்பதே ‘நிக்கிரகன்’ படத்தின் கதைக்களம் என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் நஸ்ரேன் சாம். இவர் படத்தை பற்றி மேலும் கூறுகிறார்:-

“நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப்போடும் வல்லமை படைத்தது என்பதை இந்த படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகில் கலந்து விருந்தாக்குகிறது.

படத்தில் பிரசாந்த் தாவீத், கனி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். சைதன்யா சங்கரன் தயாரிக்கிறார்.”

Next Story