சினிமா செய்திகள்

வட சென்னை தாதாக்கள் பற்றி மேலும் ஒரு படம் + "||" + North Chennai Dada

வட சென்னை தாதாக்கள் பற்றி மேலும் ஒரு படம்

வட சென்னை தாதாக்கள் பற்றி மேலும் ஒரு படம்
ஜெய்வந்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், ‘அசால்ட்.’
மத்திய சென்னை, காட்டுப்பய சார் இந்த காளி ஆகிய படங்களை தயாரித்து கதாநாயகனாக நடித்த ஜெய்வந்த், தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘அசால்ட்.’ இதில், ‘பருத்தி வீரன்’ சரவணன், சென்ராயன், டி.வி.புகழ் ராமர், கோதண்டம், சோனா, ரிஷா, நாகு, தேவி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். பூபதிராஜா டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

‘வட சென்னையை மையமாக வைத்து இதற்கு முன்பு பல படங்கள் வந்துள்ளன. இப்போதும் சில படங்கள் தயாரிப்பில் உள்ளன. அந்த படங்களின் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தாதாக்களின் கதை, இது. படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் (பூபதிராஜா) டைரக்டு செய்திருக்கிறேன்.

இதில் கதைநாயகனாக ஜெய்வந்த் நடித்து இருக்கிறார். கதைப்படி, வட சென்னையில் 4 தாதாக்கள் உள்ளனர். அதில் ஒரு தாதா, ஜெய்வந்த். 4 தாதாக்களும் மோதிக்கொள்வதும், அதில் யார் ஜெயிக்கிறார்கள்? என்பது கதை. காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை ராயபுரம், காசிமேடு பகுதிகளில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். படம், ஆகஸ்டு வெளியீடாக திரைக்கு வரும்.”