சினிமா செய்திகள்

பரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார் + "||" + Long verse In the same tag Acted Ajith

பரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்

பரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்.
அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘நேர்கொண்ட பார்வை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட காட்சி அங்கு படமாக்கப்பட்டது. இதற்காக பிரமாண்டமான கோர்ட்டு வளாக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

அதில், அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சி படமானது. நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார். அதைப்பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் கைதட்டினார்கள். பின்னர் படக்குழுவை சேர்ந்த ஒவ்வொருவரும் அஜித்துடன் கைகுலுக்கி, அவருடைய நடிப்பை பாராட்டினார்கள். அந்த பாராட்டு மழையில் நனைந்து போன அஜித் நெகிழ்ந்து போய், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“இந்த பாராட்டெல்லாம் டைரக்டர் வினோத்துக்குத்தான் போய் சேர வேண்டும். அவர் டைரக்‌ஷனில் நடித்ததை சவுகரியமாக உணர் கிறேன்” என்று அஜித் சொன்னார். கோர்ட்டில் நீளமான வசனம் பேசி அஜித் நடித்ததுடன், ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. கதாநாயகியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி, படம் திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 24 வருடங்களுக்குப்பின் அஜித் நடித்த `மைனர் மாப்பிள்ளை' `டிஜிட்டல்' படமாக வெளிவருகிறது
அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.'
2. அஜித்தின் வலிமை படத்திற்கான புதிய தோற்றம்
அஜித்தின் வலிமை படத்திற்கான தோற்றம் கசிந்துள்ளது.
3. தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி
தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி கூறி உள்ளார்.
4. “நான் பயப்பட மாட்டேன். என்னை பயமுறுத்த முயற்சிப்பவன் முகத்தில்தான் பயம் தெரியும்” - நேர்கொண்ட பார்வை விமர்சனம்
அஜித்குமார்-வித்யாபாலன் நடித்து, வினோத் டைரக்‌ஷனில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ‘பிங்க்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை.
5. நேர்கொண்டபார்வை இக்காலத் தேவை...! படத்தை பாராட்டிய நெல்லை காவல் துணை ஆணையர்
நேர்கொண்டபார்வை இக்காலத் தேவையென நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார்.