தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு


தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
x
தினத்தந்தி 11 April 2019 3:06 PM IST (Updated: 11 April 2019 3:06 PM IST)
t-max-icont-min-icon

தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 91 தொகுதிகளில், ஆயிரத்து 285 பேர் களத்தில் உள்ளனர். இதில் 89 பேர் பெண்கள் ஆவர். பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, வாக்கு சேகரித்தார். கூட்டத்தில், பேசிவிட்டு தனது காரை நோக்கி குஷ்பு சென்றார். அப்போது, பின்புறமாக வந்த இளைஞர் ஒருவர், நடிகை குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால், ஆவேசமடைந்த  குஷ்பு, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது.


Next Story