விவசாய போராளியாக சீமான் நடிக்கும் `தவம்'


விவசாய போராளியாக சீமான் நடிக்கும் `தவம்
x
தினத்தந்தி 12 April 2019 12:13 PM IST (Updated: 12 April 2019 12:13 PM IST)
t-max-icont-min-icon

சீமான் விவசாய போராளியாக நடித்துள்ள புதிய படம், `தவம்.'

இந்த படத்தை ஆர்.விஜய் ஆனந்த்-ஏ.ஆர்.சூரியன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் டைரக்டு செய்திருக்கிறார்கள். `தவம்' படத்தை பற்றி இவர்கள் இருவரும் கூறுகிறார்கள்:-

``தவம், ஒரு மிக முக்கியமான சமூக பிரச்சினையை கையிலெடுத்து, மிக ஆழமாக சிந்தித்து, அலசி ஆராய்ந்து, ஒரு நேர்த்தியான திரைப்படத்தை தர இருக்கிறது. விவசாயம் மனித வாழ்வின் அச்சாணி.

அந்த அச்சாணி முறிந்து போனால், விவசாயம் அழிந்து போனால், மொத்த சமூகமும் சிதைந்து போகும். ஒருவேளை மூன்றாம் உலகப்போர் வரும் என்றால், அது குடிநீருக்கும், சோறுக்கும்தான் நடக்கும் என்பதை ஆணிதரமாக, `தவம்' வலியுறுத்துகிறது.

இதில், சீமான் ஒரு விவசாய போராளியாக களம் இறங்கி இருக்கிறார். அறிமுக நாயகன் வசி, மற்றும் புதுமுக நாயகி பூஜாஸ்ரீ நடித்துள்ளனர். இவர்களுடன் போஸ் வெங்கட், சிங்கம்புலி, சந்தான பாரதி, கூல் சுரேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். ஆசிப் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, இணை தயாரிப்பு: ரூபா ஐயப்பன்.''


Next Story