சினிமா செய்திகள்

வித்தியாசமான பேய் படம், `பியார்' + "||" + Love-comedy with a different ghost movie, 'Piyar'

வித்தியாசமான பேய் படம், `பியார்'

வித்தியாசமான பேய் படம், `பியார்'
காதல்-நகைச்சுவை கலந்த வித்தியாசமான பேய் படம், `பியார்'
`சண்டி முனி' என்ற பேய் படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து வருபவர், மில்கா எஸ்.செல்வகுமார். இவர், ராகவா லாரன்சிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். நட்ராஜ்-மனிஷா யாதவ் நடித்து வரும் `சண்டி முனி' படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார், `பியார்' என்ற புதிய படத்தை டைரக்டு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி ஆகியோரும் உடன் நடிக்கிறார்கள்.

காதலும், நகைச்சுவையும் கலந்த படம், இது. `பியார்' படத்தை பற்றி டைரக்டர் மில்கா எஸ்.செல்வகுமார் சொல்கிறார்:- ``வழக்கமாக காதலர்களை கதாநாயகர்கள்தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில், 2 பேய்களின் காதலை ஒரு கதாநாயகன் சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை, பேயுடன் சேர்த்து வைக்கிறார். இதை பேய் காதல் என்றும் சொல்லலாம்.

வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தில் காதலும் இருக்கிறது. நகைச்சுவை கலந்த திகிலும் இருக்கிறது. படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது. ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படம் வளர இருக் கிறது.''