சினிமா செய்திகள்

பாலிவுட்டில் பிரணிதா + "||" + He is acting widely in South Indian languages

பாலிவுட்டில் பிரணிதா

பாலிவுட்டில் பிரணிதா
தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார்
கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

அஜய்தேவ்கன், சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா, பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘புஜ்’ என்ற படத்தில் பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதையாக ‘புஜ்’ தயாராகிறதாம்.