சல்மான்கான் வில்லனாக சுதீப்
மூன்றாம் பாகத்திலும் சல்மான்கான்தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
அபினவ் காஷ்யப் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘தபாங்.’ சல்மான்கான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் சிம்பு நடிப்பில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் படம் வெளிவந்தது. 2012-ம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் ‘தபாங்-2’ படம் உருவானது. இந்தப் படத்தை அர்பஸ்கான் இயக்கியிருந்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து தற்போது ‘தபாங்-3’ எடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது. மூன்றாம் பாகத்திலும் சல்மான்கான்தான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார். முதல் பாகத்தில் சோனுசூட், இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருந்தனர்.
இதையடுத்து தற்போது உருவாகி வரும் மூன்றாம் பாகத்தில் கன்னட நடிகரான கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நில அபகரிப்பு கும்பலை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் ‘தபாங்-3’ படத்தில், கதாநாயகனுக்கு இணையான வில்லன் கதாபாத்திரமாக சுதீப்பின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
Related Tags :
Next Story