பிரீத்தி ஜிந்தாவுக்கு விமானத்தில் ஏற தடை?


பிரீத்தி ஜிந்தாவுக்கு விமானத்தில் ஏற தடை?
x
தினத்தந்தி 13 April 2019 12:12 PM IST (Updated: 13 April 2019 12:12 PM IST)
t-max-icont-min-icon

பயணம் செய்ய பிரீத்தி ஜிந்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழிலதிபரான நெஸ்வாடியா என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வாங்கியிருந்தனர். இடையில் பிரீத்தி ஜிந்தாவுக்கும், நெஸ்வாடியாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

தன்னுடைய காதலன் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூட பிரீத்தி ஜிந்தா கூறினார். இப்போதும் கூட அவர்கள் இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்குதாரர்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காதல் மட்டும் முறிந்து போனது.

இந்த நிலையில் சமீபத்தில் நெஸ்வாடியாவுக்கு சொந்தமான ‘கே ஏர்’ விமானத்தில், பயணம் செய்ய பிரீத்தி ஜிந்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதையடுத்து ‘முன்பதிவு செய்த ஒருவரை பயணம் செய்யவிடாமல் தடுத்தது மிகப்பெரிய தவறு’ என்று பிரீத்தி ஜிந்தாவுக்கு ஆதரவாக கருத்து பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த விமான நிறுவனம், “இது முற்றிலும் தவறான தகவல். எங்கள் விமானத்தில் பயணிப்பதற்கு பிரீத்தி ஜிந்தா முன்பதிவு செய்திருந்தது உண்மைதான். ஆனால் அவர்தான் அன்று வரவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.


Next Story