சினிமா செய்திகள்

போனிகபூர் மகனுடன் திருமணமா? நடிகை மலைக்கா விளக்கம் + "||" + Get married with Bonikapoor son Actress Malaika Description

போனிகபூர் மகனுடன் திருமணமா? நடிகை மலைக்கா விளக்கம்

போனிகபூர் மகனுடன் திருமணமா? நடிகை மலைக்கா விளக்கம்
தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் ‘தக்க தைய்ய தைய்ய தைய்யா தைய்யா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் மலைக்கா அரோரா.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மலைக்கா அரோராவும் இந்தி நடிகர் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ் கானும் 1998-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.

பின்னர் மலைக்காவுக்கும், அர்பாஸ் கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மலைக்கா தற்போது டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மலைக்காவுக்கும், இந்தி நடிகர் அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்தது. பொதுநிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்று வந்தனர். காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.


அர்ஜுன் கபூர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மலைக்காவுக்கு வயது 45, அர்ஜுன் கபூருக்கு 33 வயது என்பதால் இவர்கள் காதலுக்கு சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களும் கிளம்பின. இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி இருவருக்கும் கோவாவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்காக திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதற்கு பதில் அளித்து மலைக்கா கூறும்போது, “எங்கள் திருமணம் பற்றி பரவும் செய்தி வேடிக்கையாக இருக்கிறது. அதில் உண்மை இல்லை. வதந்திதான். வேறு எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை” என்றார்.