சினிமா செய்திகள்

அடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு + "||" + Hit the tip of the lip Actor on Johnny Depp Former wife of the case

அடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு

அடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு
‘பை ரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப். டெட்மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம்ஹெல், சீக்ரெட் விண்டோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஜானிடெப் 1983-ல் லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015-ல் மணந்தார். இந்த திருமணமும் 2 வருடத்தில் முறிந்தது. 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.


ஜானிடெப் மீது அம்பெர் ஹெர்ட் அமெரிக்க பத்திரிகையில் அவதூறாக கருத்து தெரிவித்து இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அம்பெர் ஹெர்ட் ரூ.355 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ஜானிடெப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஜானிடெப் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக புதிய ஆதாரங்களுடன் அவர் மீது அம்பெர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜானிடெப் போதை பொருள் சாப்பிட்டு என்னை பல முறை தாக்கினார். ஜேம்ஸ் பிரான்கோவுடன் சேர்ந்து நடித்தது பிடிக்காமல் குடித்து விட்டு பொருட்களை எடுத்து என்மீது வீசி காயப்படுத்தினார். பின்னால் உதைத்து கீழே தள்ளினார். ஷூவையும் கழற்றி என்மீது வீசினார். எனது முகத்தில் குத்தினார். இதில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது” என்று கூறியுள்ளார்.