சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் சல்மான்கான் + "||" + New look actor Salman Khan

புதிய தோற்றத்தில் சல்மான்கான்

புதிய தோற்றத்தில் சல்மான்கான்
இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சல்மான்கானுக்கு அந்த கட்சி அழைப்பு விடுத்தது. அதை அவர் நிராகரித்து விட்டார்.


தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு இந்தியரும் வாக்களித்து அதன்மூலம் புதிய அரசை தேர்ந்தெடுப்பதில் அனைவரும் பங்களிப்பை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சல்கான்கான் இந்தியில் நடித்து வரும் ‘பாரத்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது.

இதில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் படத்தில் சல்மான்கான் நடிக்கும் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் ஜூன் மாதம் 5-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். சல்மான்கான் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு
சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் கடந்த பிப்ரவரியில் வந்தது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.