சினிமா செய்திகள்

‘தனிஷ்க்’ நகைக்கடையின் விளம்பர தூதராக நயன்தாரா நியமனம் + "||" + Tanishq Jewel shop Advertising ambassador Nayantara Appointment

‘தனிஷ்க்’ நகைக்கடையின் விளம்பர தூதராக நயன்தாரா நியமனம்

‘தனிஷ்க்’ நகைக்கடையின் விளம்பர தூதராக நயன்தாரா நியமனம்
டாடா குழுமத்தை சேர்ந்த ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,

இதுகுறித்து டைட்டன் ஜூவல்லரி (சந்தைப்படுத்துதல் பிரிவு) உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி கூறியதாவது:-

‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய சந்தைகளில் எங்களது புதிய விளம்பர தூதராக அவருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


நயன்தாராவின் வருகை எங்களின் பயணத்தை மேலும் சிறப்பாக்குவதுடன், எங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமான, நேர்த்தியான வசீகரத்தையும், ஆரவார வரவேற்பையும் பெற உதவும் என நம்புகிறோம். அதேவேளை பல்வேறு சமூகங்களுக்கான பிரத்தியேக கலெக்‌ஷன்களுடன் திருமண கலெக்‌ஷனான ‘ரிவா’ நகைகளும் ‘தனிஷ்க்’-ல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நயன்தாரா கூறுகையில், “தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த பிராண்ட் ஆகும். அந்த பிராண்டின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இங்குள்ள நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நகைகள் என்னை ஈர்த்து உள்ளன. ‘தனிஷ்க்’ உடனான எனது இந்த உறவு என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது”, என்றார்.

புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் நயன்தாரா, ஒப்பந்தப்படி அட்சய திருதியை முதல் ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...