சினிமா செய்திகள்

‘காபி’ படத்தில் கனவை நனவாக்க முயற்சிக்கும் இனியா! + "||" + Iniya in the coffee film

‘காபி’ படத்தில் கனவை நனவாக்க முயற்சிக்கும் இனியா!

‘காபி’ படத்தில் கனவை நனவாக்க முயற்சிக்கும் இனியா!
ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில், அறிமுக டைரக்டர் சாய் கிருஷ்ணா டைரக்‌ஷனில், முக்கிய வேடத்தில் இனியா நடித்துள்ள படம், ‘காபி.’
காபி படத்தை பற்றி டைரக்டர் சாய் கிருஷ்ணா கூறியதாவது:-

“ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோர் களை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, தனது கனவை நனவாக்க முயற்சிக்கிறார். தன் தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறார்.

இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்து விடும் காலம் வந்து விட்டது என்று நம்பிய வேளையில், எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறு கிறார்? என்பதே கதை.

நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமூக அவலத்தை இந்த படம் தோலுரித்து காட்டும். அது, படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும். வெகு நேர்த்தியாக உருவாகியிருக்கும் படம், இது. கதைநாயகியாக இனியா நடித்து இருக்கிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது.”