சினிமா செய்திகள்

ராஜு முருகன் கதை-வசனத்தில்‘மெஹந்தி சர்க்கஸ்’ + "||" + Mehndi Circus

ராஜு முருகன் கதை-வசனத்தில்‘மெஹந்தி சர்க்கஸ்’

ராஜு முருகன் கதை-வசனத்தில்‘மெஹந்தி சர்க்கஸ்’
‘குக்கூ,’ ’ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற புதிய படத்தின் கதை-வசனத்தை எழுதியிருக்கிறார். அவருடைய அண்ணன் சரவண ராஜேந்திரன் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் திரைக்கதை எழுதி, டைரக்டு செய்திருக்கிறார். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை பற்றி டைரக்டர் சரவண ராஜேந்திரன் கூறியதாவது:-

“மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஸ்வேதா திரிபாதி. இவர், மும்பை அழகி. மாரிமுத்து, விக்னேஷ்காந்த், வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.

இது, சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதை. எளிமையான காதல் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “படம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டினார். அதன் பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்.”