சினிமா செய்திகள்

பிரியா வாரியரை முந்திய நூரின் + "||" + Priya Warrier Beating noorin

பிரியா வாரியரை முந்திய நூரின்

பிரியா வாரியரை முந்திய நூரின்
ஒரு அடார் லவ் பட நாயகி பிரியா வாரியரை அவருடன் நடித்த நடிகை நூரின் முந்தினார்.

‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் சேர்ந்தனர். ஆனால் படம் திரைக்கு வந்து தோல்வி அடைந்து அவருக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின.

பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தார்கள். படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்த நூரின் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டினர். பிரியா வாரியர் கண் அடிக்கும் வீடியோ பிரபலமானதால் தயாரிப்பாளர் நிர்ப்பந்தித்து அவருக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் கதையை மாற்றிவிட்டார் என்று படத்தின் இயக்குனர் ஓமர் லூலு குறை கூறினார்.

நூரினும் முதலில் தன்னை கதாநாயகியாக தேர்வு செய்து பின்னர் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கிவிட்டனர் என்று குற்றம்சாட்டினார். பிரியா வாரியருக்கு மலையாளத்தில் புதிய படங்களுக்கு யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் நூரினுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. உன்னிமுகுந்தன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “சேது இயக்கும் சாக்லேட் ரீடோல்ட் படத்தில் உன்னி முகுந்தனுடன் நடிக்கிறேன். ஒரு அடார் லவ் படத்தை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பு தருவதாக இயக்குனர் தெரிவித்தார். கதை கேட்டதுமே பிடித்து விட்டது” என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? பிரியா வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு
இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கண்சிமிட்டல் பிரபலமான பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.