சினிமா செய்திகள்

மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா? + "||" + Trisha Pair again with Siddharth

மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா?

மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா?
மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சித்தார்த்தும் திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.


இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. கடந்த 3-ந் தேதி சீனாவில் இந்த படம் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது.

இதுகுறித்து படத்தில் நடித்த ஆயுஷ்மேன் டுவிட்டரில், “சினிமா எப்போதுமே எல்லைகளையும் மொழிகளையும் கடந்து செல்லக்கூடியது. அந்த வகையில் சிறந்த படத்துக்கான வரவேற்பை அந்தாதுன் படம் சீனாவில் பெற்று இருப்பது நமது நாட்டுக்கு பெருமையான விஷயம்” என்று கூறியுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பார்வையற்றவராக வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை.

அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.