சினிமா செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார் + "||" + Sri Lankan blast: Actress Radhika Sarath Kumar survived

இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்

இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்.
கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், கிங்க்ஸ் பெரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இலங்கை சென்றிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சின்னமன் கிராண்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்துள்ளார். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அங்கிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் சின்னமன் ஓட்டலில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது
இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
2. இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
3. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி
இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.
4. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது - இலங்கை ராணுவம்
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்க கூடும் என அந்நாட்டு ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.
5. சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.