சினிமா செய்திகள்

கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி + "||" + Actress Priya Anand retaliation

கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி

கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி
சமூக வலைதளங்களில் நடிகர்கள், நடிகைகளை கடுமையாக விமர்சிப்பதும், கலாய்ப்பதும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமாக பிரியா ஆனந்த் இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது:- நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன். உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.