சினிமா செய்திகள்

‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி + "||" + Kanchana-3 movie was released on the website

‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி

‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘காஞ்சனா-3’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், ‘காஞ்சனா-3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிடப்பட்ட பெரும்பாலான தியேட்டர்கள், நேற்று காலை காட்சி முதல் இரவு காட்சி வரை ‘ஹவுஸ்புல்’லாக இருந்தது.

படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வசூலில் சாதனை புரிந்தது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த படம், இது. கதையில் புதுசாக எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்கலாம் என்ற பெயரை சம்பாதித்துள்ளது. ‘காஞ்சனா-3’ தியேட்டர்களில், குடும்பம் குடும்பமாக வந்து திரையரங்கை நிறைப்பதாக பேசப்படுகிறது.

“பேய் படம் என்றாலே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ‘ஹிட்’டாக்காமல் ஓய மாட்டார்கள். ‘காஞ்சனா-3’ மட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். இந்தநிலையில், ‘காஞ்சனா-3’ படத்தின் வசூல் பாதிக்கும் வகையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ‘காஞ்சனா-3’ படத்தை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில், தியேட்டர்களுக்கு செல்ல நினைத்த பலர் ஆன்லைனில் படத்தை பார்த்துவிடுவார்கள்.