சினிமா செய்திகள்

ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ! + "||" + Bachusree as Jai's lover in 'Breaking News'!

ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ!

ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ!
‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ!
இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமூகத்தின் நலனுக்காக, ‘சூப்பர் ஹீரோ’வாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் கதை இது. உணர்வுப்பூர்வமான சம்பவங்களையும், நல்ல கருத்துக்களையும் கொண்ட படம். படத்தின் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் டைரக்டு செய்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.

‘பிரேக்கிங் நியூஸ்’ பற்றி கதாநாயகி பானுஸ்ரீ கூறுகிறார்:-

“இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன். அவருடைய அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல்வசப்பட்டு பின் அவரை திருமணம் செய்து கொண்டு ‘ஈகோ’ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்துக்கு பிறகு கலாசாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன். முதல் கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டேன். அடுத்து சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்” என்றார்.