இரட்டை டைரக்டர்கள் படத்தில் சாய்குமார் மகன் ஆதி கதாநாயகன் ஆகிறார்
வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் சாய்குமார் அடுத்து தனது வாரிசாக மகன் ஆதியை திரையுலகுக்கு அழைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி, வேதிகா.
இந்த படத்தை காவ்யா மகேஷ், சி.வி.குமார், மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இரட்டை இயக்குனர்களான கார்த்திக்-விக்னேஷ் சகோதரர்கள் டைரக்டு செய்கிறார்கள். படத்தை பற்றி இருவரும் சொல்கிறார்கள்:-
“தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கு திரையுலகில் தனது திறமையை ஏற்கனவே ஆதி நிரூபித்து இருக்கிறார். தற்போது அவர் தமிழ் பட உலகில் முதன் முதலாக கால்பதிக்கிறார்.
வேதிகா அவருடைய அழகான தோற்றத்துக்காக மட்டும் பேசப்படவில்லை. அவரது நடிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாக இருக்கிறார். தமிழ் ரசிகர்களை கவரும் வகையில், இந்த படம் இருக்கும். படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.”