சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன் + "||" + Prabhakaran will be pairing with Vijay Sethu

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்
‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்
‘ஆரஞ்சு மிட்டாய்,’ ‘ஜுங்கா,’ ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களை தயாரித்த விஜய்சேதுபதியின் சொந்த பட நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்,’ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ஆகிய படங்களை தயாரித்த 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு, ‘லாபம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.

‘இயற்கை,’ ‘பேராண்மை,’ ‘ஈ,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்கிறார். மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ராஜபாளையத்தில் தொடங்கியது. “அதிரடி சண்டை காட்சிகளும், அற்புதமான கதையம்சமும் கொண்ட படம், இது. இந்த படம் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் ஆகிய இருவரின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்” என்கிறார், டைரக்டர் ஜனநாதன்.