சினிமா செய்திகள்

தரணிதரன் டைரக்‌ஷனில் சிபிராஜ் நடிக்கும் ‘சிவா’ + "||" + Sivraj's 'Siva' in Taranikaran Direction

தரணிதரன் டைரக்‌ஷனில் சிபிராஜ் நடிக்கும் ‘சிவா’

தரணிதரன் டைரக்‌ஷனில் சிபிராஜ் நடிக்கும் ‘சிவா’
மீண்டும் இணைகிறார்கள் தரணிதரன் டைரக்‌ஷனில் சிபிராஜ் நடிக்கும் ‘சிவா’
நடிகர் சிபிராஜும், டைரக்டர் தரணிதரனும், ‘ஜாக்சன் துரை’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணிபுரிந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு, ‘சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. காவ்யா மகேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி சிபிராஜ் கூறியதாவது:-

“இந்த கதையின் மையக்கரு உடனடியாக என்னை ஈர்த்தது. என்ன ஆனாலும் தவறவிடக் கூடாது என்று நினைக்கும் வகையில் சில கதைகள் அமையும் அல்லவா? அதுமாதிரி கதையுடன் டைரக்டர் தரணிதரன் வந்தார். இதில், நான் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறேன். படத்தில் ஒரு புலி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது” என்றார்.

தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, “அனைத்து வயதினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில், கதை அமைந்து இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட தற்போதையை சூழ்நிலைக்கு ஏற்ப படம் இருக்கும்” என்கிறார்.

.