சினிமா செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி + "||" + I will contest assembly elections - Actress Kasturi

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
நடிகை கஸ்தூரி ‘இ.பி.கோ. 302’ என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சலங்கை துரை டைரக்டு செய்துள்ளார். இதில் இளம் காதல் ஜோடியாக நாகசக்தி, வர்ஷிதா மற்றும் வையாபுரி, ராபின்பிரபு, போண்டாமணி ஆகியோரும் நடித்துள்ளனர். செங்கோடன் துரைசாமி தயாரித்துள்ளார்.

படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கஸ்தூரி கூறியதாவது:-

“நான் இ.பி.கோ. 302 படத்தில் துர்கா ஐ.பி.எஸ். என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஆணவ கொலை முக்கிய கருவாக இருக்கும். காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அதன்பிறகு இருக்கும் வாழ்க்கையை யாரும் பேசியது இல்லை. இந்த படத்தில் அதுதான் முக்கியமாக இருக்கும்.

தொடர்ச்சியாக நடக்கும் சில கொலைகளின் மர்மங்களை நான் எப்படி கண்டுபிடிக்கிறேன் என்பது விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. எனது அரசியல் தொடர்பு குறித்து பலரும் கேட்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்காக பல கட்சிகள் என்னை அழைத்தன. விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டேன்.

சமூக சேவையில் ஆர்வம் உள்ள பலர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. சிலர் சுயேச்சையாக களத்தில் நின்றாலும் மக்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. அரசியல் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன். சுயேச்சையாக நிற்கமாட்டேன்.”

இவ்வாறு கஸ்தூரி கூறினார்.