சினிமா செய்திகள்

நளினகாந்தி படத்தில், கஸ்தூரி + "||" + In the movie Nalinakanthi, Kasthuri

நளினகாந்தி படத்தில், கஸ்தூரி

நளினகாந்தி படத்தில், கஸ்தூரி
சராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் பொன் சுகீர் டைரக்‌ஷனில் `நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது.
சராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் முதல் தமிழ் திரைப்படத்திலேயே முத்திரை பதிக்கும் நோக்கத்தில், அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பில் பயிற்சி பெற்றிருக்கும் பொன் சுகீர் டைரக்‌ஷனில், `நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது.

தேசிய விருது பெற்ற நடிகர் ஐ.எஸ் ஜெயபாலன், ஒரு மிக முக்கிய கனமான வேடத்தில் நடிக்க, அவருடன் இணைந்து கஸ்தூரி, 'சென்னை எக்ஸ்பிரஸ்' புவிஷா உள்பட பலரும் நடித்து இருக்கிறார்கள்.

இத்திரைப்படம், பிரபலமான ஒருவர் மனநோய்க்கு உள்ளாகும் போது, அவரது வாழ்க்கையில் நடை பெறும் சம்பவங்களை மிகவும் ஆழமாக, நளினமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது. ஒரு உணர்வுப்பூர்வமான, ஆழமான கதையை எடுத்துக்கொண்டு அதனை சீரிய படைப்பாற்றலுடனும், உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலமும், நம் பார்வைக்கு படைத்திருக்கிறார், அறிமுக இயக்குனர் பொன் சுகீர்.

மேற்கத்திய இசை பின்னணி கொண்ட ஜூட் ஆரோகணம், இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

பொன் சுகீர் படத்தை இயக்கியதோடு, கதை மற்றும் படத்தொகுப்பையும் சேர்த்து கவனித்திருக்கிறார்.