சினிமா செய்திகள்

லைகா நிறுவனம் தயாரிக்கிறது : திரிஷா படத்தின் பெயர், ‘ராங்கி!’ + "||" + LICA company is producing. Trisha movie name is 'Ranki'

லைகா நிறுவனம் தயாரிக்கிறது : திரிஷா படத்தின் பெயர், ‘ராங்கி!’

லைகா நிறுவனம் தயாரிக்கிறது : திரிஷா படத்தின் பெயர், ‘ராங்கி!’
திரிஷா தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார்.
திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்ஷனில், ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக, அவர் தலைமுடியின் நீளத்தை குறைத்துக் கொண்டு புதிய சிகை அலங்காரத்துடன் காணப்படுகிறார்.

இதையடுத்து அவர் எம்.சரவணன் டைரக்‌ஷனில், இன்னொரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். படத்துக்கு, ‘ராங்கி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ‘ராங்கி’ என்றால் அடங்காத பெண்...துணிச்சல் மிகுந்தவர் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன.

கதை-வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.