சினிமா செய்திகள்

ஜோதிகா நடித்த நகைச்சுவை படம் + "||" + A comedy movie starring Jyothika

ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்

ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்
நகைச்சுவை படம் ஒன்றில் ஜோதிகா நடித்துள்ளார்.
`36 வயதினிலே', 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களை தொடர்ந்து ஜோதிகா கதாநாயகியாக நடித்து, அவரது கணவர் சூர்யா தயாரித்துள்ள படத்தை கல்யாண் டைரக்டு செய்து இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து உள்ளது. என்றாலும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டைரக்டர் கல்யாண் ஏற்கனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் சிரிக்க வைத்தவர். இந்த படமும் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது தான்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து படங்கள் குவிந்தன.